தெற்கு தாய்லாந்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த 4 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 3 பேர் இறந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதவிர தீவைப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்தில் மலேசிய எல்லையை ஒட்டியுள்ள 3 மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின் றனர். இந்த மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி கேட்டு கடந்த 2004 முதல் கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். ராணு வம், போலீஸாருக்கும் கிளர்ச்சி யாளர்களுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களில் இதுவரை 6,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்திய தொடர் வன்முறை சம்பவமாக நேற்று முன்தினம் தெற்கு தாய்லாந்தில் 4 இடங்களில் குண்டு வெடித்தது. சாங்க்லா மாகாணம், சடாவ் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பொருத் தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் இறந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
இதுபோல் நரத்திவாட் மாகாணத்தில் 3 இடங்களில் குண்டு வெடித்ததில் 8 பேர் காய மடைந்தனர். சுக்னை கொலாக் மாவட்டத்தில் கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதே பகுதியில் 35 வயது முஸ்லிம் இளைஞர் அடையாளம் நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களா என இதுவரை தெரியவில்லை.
தாய்லாந்தில் கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய ஜுன்டா, கிளர்ச்சி யாளர்களுடன் தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப் போவதாக உறுதி கூறினார். ஆனால் இது வரை இதில் சிறிதளவே முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago