சிரிய நகரில் இணைய சேவையை முடக்கியது ஐ.எஸ்.

By ஏஎஃப்பி

சிரியாவின் ரக்கா நகர பகுதியில் உள்நாட்டு தனியார் இணைய சேவையை முற்றிலுமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் முடக்கியுள்ளனர்.

சிரியாவின் ரக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்கள் இணையத் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், ஐ.எஸ். போராளிகளுக்கும் கூட இணைய சேவை மறுக்கப்படுவதாகவும் அங்கிருக்கும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இந்த அடக்குமுறை அங்கு புதிதாக நடந்து வருவதாக சிரியாவில் போர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. தனியார் வைஃபை சேவைகளை முடக்கிய ஐ.எஸ். இயக்கத்தினர், இணைய சேவையை பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கியுள்ளனர்.

அங்கு ஐ.எஸ். இயக்கத்தால் மட்டும் தற்போது இணைய சேவை பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இணைய சேவை குறித்து தனியார் நிறுவனங்களை கண்காணித்து வரும் பயங்கரவாதிகள், உள்நாட்டிலிருந்து எந்த செய்திகளும் இனி வெளியே செல்லக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்