உலகப் புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஓமர் ஷெரீப் கெய்ரோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வெள்ளியன்று தனது 83 வயதில் காலமானார்.
சமீபகாலமாக மறதி நோயில் போராடிக் கொண்டிருந்த அவர் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ மருத்துவமனை யொன்றில் சிகிச்சை பெற்றுவந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணத்தைத் தழுவினார்.
எகிப்தில் பிறந்த ஓமர் ஷெரீப், லாரென்ஸ் ஆப் அரேபியா மற்றும் டாக்டர் ஷிவாகோ போன்ற படங்களில் நடித்து சர்வதேச புகழின் உச்சிக்கு சென்றார். கிரிகோரி பெக்'குடன் இணைந்து இவர் நடித்த 'மெகன்னஸ் கோல்ட்' (1968) திரைப்படம் இவரை உலகின் மூலைமுடுக்கெங்கும் கொண்டு சென்றது. 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்தது 2013ல் 'ராக் கசாபா' எனும் மொராக்கோ பிரெஞ்ச் திரைப்படம்.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்டீவ் கெனீஸ் எனும் கலாச்சார அமைப்பு, மற்றும் எகிப்திய நாடகக் கலை கில்ட்டின் தலைமையகம் போன்றவற்றிற்கு நீண்டகால நிர்வாகியாக பொறுப்பு வகித்திருந்தார்.
இயக்குநர் டேவிட் லீன் இயக்கத்தில் 1962ல் லாரென்ஸ் அரேபியா அவர் நடித்துக்கொண்டிருந்தபோது ஹாலிவுட் திரைப்பட உலகில் மிகப்பெரிய வசூல் மன்னனாகத் திகழ்ந்தவர்.
ஆனால், ஓட்டமான் பேரரசை எதிர்த்து உருவாகும் அராபிய கலகத்தை வழிநடத்தும் புதிரான பழங்குடியின தலைவரான ஷெரீப் அலி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இயக்குநர் முதலில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.
இயக்குநர் லீன் இப்படத்திற்காக வேறொரு நடிகரை தேர்வு செய்திருந்தார். ஆனால் அவருடைய கண்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை என்பதை இயக்குநர் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சார் ஸ்பையீகெல், கெய்ரோ நகரத்திற்கு வந்து ஷெரீப் கண்டுபிடித்தார்.
பின்னர் அவர் சரளமாக ஆங்கிலம் பேசுவதை உறுதிசெய்யும் ஸ்கின் டெஸ்டை வென்றபிறகு இதில் நடிப்பதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார்.
இத்திரைப்படம் சிறந்த உறுதுணை நடிகராக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதோடு சர்வதேச வெளிச்சம் படவும் காரணமாயிருந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஷெரீப் தனது திறமையை நன்கு வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. ரஷ்ய வரலாற்றில் பல பத்தாண்டுகளைக் கடந்தும் நிலைத்திருக்கும் ரஷ்யப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை அது. கவிஞர், டாக்டர் ஷிவாகோவும் அவரது அன்புமனைவி லாராவும் ரஷ்ய புரட்சியின்போது எதிர்கொண்ட வாழ்க்கையை சித்தரிக்கும் படைப்பு அது.
டாக்டர் ஷிவாகோ என்ற இத்திரைப்படம் வெளியானவுடன் ரசிகர்களிடம் சரியான ஆதரவு கிட்டவில்லை. இதனால் எம்ஜிஎம் பட நிறுவனம் டாக்டர் ஷிவாகோ படத்தை திரையரங்கங்களிலிருந்து எடுத்துவிட்டது. இதில் ஏதோ தவறு இருக்கிறது என்பதை இயக்குநர் டேவிட் லீன் உணர்ந்தார். உடனடியாக படத்தின் நீளத்தை குறைத்து கச்சிதமாக எடிட் செய்து திரும்பவும் தியேட்டர்களில் வெளியிட முயற்சி செய்தார்.
இம்முறை படம் மாபெரும் வெற்றியை ஈட்டியதோடு வசூலிலும் ஒரு கை பார்த்தது. இப்படத்தில் இசை மிகவும் இனிமையாக அமைந்திருந்தது. ஆஸ்கர் அவார்ட் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் மௌரீஸ் ஜாரேயின் இப்படத்திற்கு அளித்த இசையொழுங்கைப் பற்றிக் குறிப்பிடும்போது 'இதுதான் உலகத்தரம். இசையின் உயர்ந்த தரம்...' என இயக்குநர் டேவிட் லீன் புகழ்ந்தார்.
எதிர்பார்க்கப்படும் நடிகர்
அவர் எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பினும், அந்த வெற்றியை பின் எப்போதுமே தொடவில்லை. அவரது கலைத்திறமை வேறுபட்ட தேசிய இனங்களில் முன்னரே அதிகஅளவில் கண்டறியப்பட்டுவிட்டது ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இடைப்பட்ட ஆண்டுகளில் ஷெரீப், தி பிங் பேந்தர் ஸ்டிரைக்ஸ் எகைன், ஓ ஹெவன்லி டாக் போன்ற சில திரைப்படங்களில் தோன்றினார். தி பால்டிமோர் புல்லட் உள்ளிட்ட பல படங்களை அவரே ''குப்பை'' என்று ஒதுக்கிவிட்டார். இந்த வறட்சி தொடர்ந்து நீடித்தது. 1990களின் இறுதியில் அனைத்து திரைப்பட வாய்ப்புகளும் குறைந்தன.
''நான் எனது சுயமரியாதையையும் கண்ணியத்தையும் இழந்துவிட்டேன். என் பேரப்பிள்ளைகளும் என்னை கிண்டலடிக்கின்றனர்.'' என்று 2004ல் ஒரு செய்தியாளரிடம் கூறியிருக்கிறார்.
2003ல் ஒரு பிரெஞ்ச் திரைப்படத்தில், யூத சிறுவனை எடுத்து வளர்க்கும் ஒரு முஸ்லீம் கடைமுதலாளியாக நடிக்க ஒப்புக் கொண்டார். மன்சீயூர் இப்ராஹிம் என்ற பிரெஞ்ச் திரைப்பட இயக்குநரின் படம் அது.
இந்தப் பாத்திரத்தை ஏற்று அவர் நடித்ததற்காக ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் சீசர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்கோ மார்டென்சன் எனும் மேற்கத்திய
நட்சத்திரத்தோடு இணைந்து ஹிடல்கோ எனும் திரைப்படத்திலும் அவர் நடித்தார். இதில் பாலைவன ஷேக் வீரனாக வந்து தனது ஒற்றை வாளைக் கொண்டு 11 பேரின் தாக்குதல்களை முறியடிப்பார். மீண்டும் அவரது பாதை சரியான திசைக்கு திரும்பியது.
சிரியா-லெபனான் தாய்தந்தையருக்கு எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியாவில் உள்ள மிக்கேல் ஷால்ஹூப்பில் ஒமர் ஷெரீப் பிறந்தார். அவரது தந்தையின் மரம்வெட்டும் நிறுவனத்தில் மூன்று ஆண்டு பணியாற்றியபிறகு திரைப்பட நடிகராகும் தனது நீண்டகால லட்சியத்தை அடைந்தார். இருபது படங்களுக்கும் மேல் எகிப்திய திரைப்படங்களில் அவர் ஒமர் எல் ஷெரீப் என தோன்றி நடித்துவந்தார்.
சீட்டாட்டக்காரரும் கூட
திரைப்படங்களுக்கு அப்பால் உலகின் சிறந்த சீட்டாட்டக்காரராக ஷெரீப் விளங்கினார். பல ஆண்டுகள் இவர் ஒரு தினசரி இதழ் ஒன்றில் சீட்டாட்டம் குறிந்த பத்திஎழுத்தாளராகவும் பங்காற்றி வந்துள்ளார். பிற்காலத்தில் சூதாட்டத்தை கைவிட்டபிறகு இந்த விளையாட்டிலிருந்து விலகத் தொடங்கினார்.
ஷெரீப் கெய்ரோவிலும் பாரீஸில் உள்ள ராயல் மான்சீன் ஹோட்டல் அறைகளிலும் தனது பிற்கால வாழ்க்கையை செலவிட்டார். தனிமையிலும் முதுமையிலும் வாழ நேரும்போது அதற்கு உகந்த இடம் ஹோட்டல்தான் என்று ஒரு செய்தியாளரிடம் 2005ல் கூறியிருக்கிறார்.
அவர் மேலும்லுகூறும்போது, நீங்கள் தனிமையை உணருகிறீர்கள் என்றால் நேராக நீங்கள் கீழே இறங்கி மதுபான அருந்தகத்திற்கு செல்லமுடியும். இங்கு வேலை செய்கிறவர்களையும் இங்கு வழக்கமாக வருகிறவர்களையும் எனக்குத் தெரியும். உங்களுக்காகவென்றே ஒரு அறை இருக்கும்பொழுது, எதைப் பற்றியும் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். உடல்நலம் சார்ந்து நீங்கள் ஏதோ உணர்வீர்கள் என்றால் பாரீஸ்ஸில் உள்ள எந்த ஆம்புலன்ஸ் சேவையையும் அழைத்திட உடனே வரவேற்பு அறைக்கு தொலைபேசி செய்து சொல்லலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago