தன்பாலின திருமணத்துக்கு அமெரிக்கா முழுவதும் அனுமதி

By ஏபி



வாஷிங்டன்

தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா முழுவதும் சட்டபூர்வமானது. முன்பு 36 மாகாணங்களில் மட்டுமே தன்பாலின திருமணம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று நாடு முழுவதும் தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வமான அனுமதியை வழங்கியது. இதையடுத்து மீதமுள்ள 14 மாகாணங்களிலும் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், சமத்துவத்தை நோக்கிய நமது பயணத்தில் இது மிகப்பெரிய முன்னேற்றம் என்று கூறியுள்ளார்.

எனினும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உடனடியாக அமலுக்கு வரவில்லை. இது தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 mins ago

உலகம்

18 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்