போராட்டங்களின்போது ஓடும் வாகனங்களை குறிவைத்து கல்வீச்சில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் புதிய மசோதாவுக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே தற்போது இருக்கும் சட்டத்தின்படி, கல்வீச்சு உள்ளிட்ட குற்றங்களுக்கு இஸ்ரேலில் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவின்படி, பிறரை காயப்படுத்தும் நோக்கத்தோடு எவரேனும் நபர்கள் அல்லது ஓடும் வாகனங்கள் மீது கற்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தி அதன் மூலம் பிறருக்கு காயம் ஏற்பட்டால் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் மசோதா திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு பாலஸ்தீனத்தின் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையால் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் போலீஸ் வாகனங்களை குறிவைத்து கல்வீச்சில் ஈடுபடும் சம்பவம் மேற்குக் கரை சாலைகள் மற்றும் கிழக்கு ஜெருசலெமில் தினந்தோறும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago