உலகம் முழுக்க அணு ஆயுதங்களைக் கைவிடும் போக்கு அதிகரித்து வந்தாலும் அதற்கு நேர் எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து தங்களின் அணு ஆயுத இருப்பை அதிகரித்து வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்' அணு ஆயுதங்கள் குறித்து ஒவ்வோர் ஆண்டும் ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2010 முதல் 2015ம் ஆண்டு வரை உலகம் முழுக்க 22,600 ஆக இருந்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 15,850 ஆகக் குறைந்துள்ளது. எனினும் இந்தியாவில் 90ல் இருந்து 100 ஆகவும், பாகிஸ்தானில் 100ல் இருந்து 120 ஆகவும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தவிர, இவை மேலும் நவீனமான, விலையுயர்ந்த, நீண்ட கால அணு ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களையும் வைத்திருக்கின்றன.
இது ஒருபக்கம் இருக்க, 1968ம் ஆண்டு அணு ஆயுதப் பரவல் உடன்படிக்கை மூலம் அங்கீகரிக்கப்பட்ட சீனா (260 அணு ஆயுதங்கள்), பிரான்ஸ் (300 அணு ஆயுதங்கள்) மற்றும் பிரிட்டன் (215 அணு ஆயுதங்கள்) ஆகிய மூன்று நாடுகள் புதிதாக எந்த ஓர் அணு ஆயுதத்தையும் தயாரிக்கவோ அல்லது பயன்படுத்தவோ இல்லை. அல்லது அவ்வாறு செய்யப்போவதாக தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தக் கூட இல்லை.
எனினும், சீனாவில் மிகக் குறைந்த அளவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வட கொரியாவில் 6ல் இருந்து 8 ஆக அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அந்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி எத்தகையது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.
அணுசக்தி தொடர்பாக இரான் உடன் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை பேச்சு வார்த்தை நடத்தி வரும் வேளையில் இந்த ஆய்வறிக்கை வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago