முஸ்லிம் மக்களால் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், அதனை மீறி உணவு சாப்பிட்ட சிறுவர்களை ஐ.எஸ். அமைப்பினர் தூக்கிலிட்டதாக சிரியாவில் செயல்படும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
"டையர் எஸ்ஸார் மாகாணத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 2 பேர் தூக்கிலேற்றிக் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவருமே காலை முதல் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டனர்.
பின்னர் மாலை சூரியன் மறைந்த பிறகு ஜிகாதிகளால் தூக்கிலிடப்பட்டனர். சிறுவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜிகாதிகளிடம் சிக்கியதே இதற்கு காரணம்" என்று ஐ.நா. கண்காணிப்பு மையத்தின் தலைமை அதிகாரி ரமி அப்தெல் ரகுமான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ரமலான் என அழைக்கப்படும் நோன்பு காலம் முஸ்லிம் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நோன்பு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், விரதத்தை மீறி உணவு சாப்பிட்டதால், தூக்கிலேற்றப்பட்ட சிறுவர்கள் அருகே, "மத நம்பிக்கையை மீறி நோன்பை மறுத்தவர்கள்" என்று எழுதப்பட்ட பதாகை வைக்கப்பட்டிருந்தாக அங்கு வாழும் மக்கள் குறிப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago