அமெரிக்காவில் ஐ-போன் கொடுக்காததால் ஹைதராபாத் இளைஞர் கொலை

By என்.மகேஷ் குமார்

அமெரிக்காவில் விலை உயர்ந்த ஐ-போனை கொடுக்காததால் ஹைதராபாத் வாலிபரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளது. இந்நிலை யில், தங்களது மகனின் சடலத்தை ஹைதராபாதுக்கு கொண்டு வர உதவுமாறு தெலங்கானா முதல்வ ருக்கு பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

ஹைதராபாத் சுப்ரமணியம் காலனியைச் சேர்ந்த வியாபாரி ஹரி கவுட். இவருக்கு ரூபா பவானி என்ற மனைவியும், சாய் கிரண், அவினாஷ் ஆகிய இரண்டு மகன் களும் உள்ளனர். இதில் சாய் கிரண் (23) மேற்படிப்புக்காக (எம்எஸ்) கடந்த மாதம் 2-ம் தேதி அமெரிக்கா சென்றார். இவர் ஃப்ளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் 11 நண்பர்களுடன் தனி குடியிருப்பில் விசித்து வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ரூ.60 ஆயிரம் கொடுத்து புதிய ஐ போன் வாங்கி உள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தனது குடியிருப்புக்கு வெளியே புதிய ஐ போனில் தனது நண்பர் காந்த் ரெட்டியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை குடியிருப்புக்கு மேல் மாடியில் இருந்த சக மாணவர்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள், ஐ போனை கொடுக்கும்படி கேட்ட தற்கு, சாய் கிரண் மறுத்துள்ளார். இதனால் துப்பாக்கியால் 4 ரவுண்டு சுட்ட மர்ம நபர்கள், ஐ போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர்.

சாய் கிரணை, அவரது நண்பர் கள் அருகில் இருந்த ஒரு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கெனவே இறந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சாய் கிரணின் நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஹைதராபாத் குஷாய் கூடா போலீஸில் நேற்று புகார் கொடுத்தனர்.

மேலும் சாய் கிரணின் பெற்றோர் நேற்று காலையில் ஹைதராபாதில் உள்ள தலைமை செயலகத்துக்குச் சென்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினர். அப்போது தனது மகனின் சடலத்தை ஹைதராபாதுக்குக் கொண்டுவர உதவி புரியுமாறு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டனர். இதற்கு உடனடியாக உதவி புரிவதாக முதல்வர் வாக்குறுதி அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்