சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் நாய்க் கறி திருவிழாவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் நேற்று யூலின் என்கிற பகுதியில் உள்ள அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துரத்தியடித்துள்ளனர்.
கோடைகாலம் உச்சம் அடையும் தினத்தை வரவேற்று யூலின் நகரத்தில் ஆண்டுதோறும் நாய்க் கறி திருவிழா நடைபெறுகிறது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று அங்கு உள்ள அரசு அலுவலகம் முன்பு விலங்கு நல ஆர்வலர்கள் 10 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாய்க் கறி திருவிழாவுக்கு எதிரான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
அப்போது, அவர்களை 20 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குழு தாக்கியதோடு, அந்த இடத்தை விட்டு அவர்களை துரத்தியடிக்கவும் செய்தனர்.
நாய்க் கறி உண்பதற்கு எந்தத் தடையும் இல்லாத சீனாவில், தற்போது ஏற்கெனவே அமலில் இருக்கும் சுகாதாரம் மற்றும் நிர்வாகச் சட்டங்களின் கீழ், இந்தத் திருவிழாவுக்குத் தடை விதிக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருவிழாவில் எங்கிருந்தோ திருடப்பட்ட வளர்ப்பு பிராணி நாய்கள் தான் பெரும்பாலும் உணவாகப் பரிமாறப்படுகின்றன என்று ஹாங்காங்கில் உள்ள 'அனிமல்ஸ் ஆசியா' என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருவிழாவில் நாய்கள் கொல்லப்படுவதைத் தடுக்க, சீனாவின் பல பகுதிகளில் இருந்து வரும் மக்கள், நாய்களை வாங்கிச் சென்று தங்கள் இல்லங்களில் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
யாங் சியாயுன் எனும் விலங்கு நல ஆர்வலர் ஒருவர், இவ்வாறு நாய்களைக் காப்பாற்ற 7 ஆயிரம் யுவான்கள் (சுமார் ரூ.66 ஆயிரம்) செலுத்தி, கடந்த சனிக்கிழமை 100 நாய்களைக் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago