நைஜீரிய அதிபராக பதவியேற்றார் முகமது புகாரி

By ஏபி

நைஜீரிய அதிபராக முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முகமது புகாரி, நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

நைஜீரிய அதிபர் தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சித் தலைவரான முகமது புகாரி வெற்றிபெற்றார். தற்போது 72 வயதாகும் முகமது புகாரி கடந்த 1980ல் சிறிது காலம் ராணுவ ஆட்சியாளராக நைஜீரியாவை தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ளார்.

தற்போது நைஜீரியாவின் பொருளாதார, அரசியல் சூழல்கள் மிக மோசமாக உள்ளன. பெரும் ஊழல்கள் காரணமாக அரசு கருவூலம் காலியாக உள்ளது. தீவிரவாதம் காரணமாக 15 லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரும் எண்ணெய் வளம் மிக்க நாடான நைஜீரியாவை அதன் சிக்கல் களிலிருந்து மீட்டெடுப் பேன் என புகாரி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட வெளியில் கடன் வாங்கும் சூழல் உள்ளது. போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அதிபராகப் பொறுப்பேற்கும் விழாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.

தற்போதைய அதிபர் குட்லக் ஜோனதன், தனது ஆட்சி நிர்வாகம் பற்றிய அறிக்கையை புகாரியிடம் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

48 mins ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்