ஆப்கான் நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டது: 350 பேர் பலி, 2000 பேர் மாயம்

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள படாக்ஸான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே புதைந்துள்ளது. இதுவரை 350 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 2000க்கும் அதிகமானவர்கள் மண்ணில் புதைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 350 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் என்றும் அங்கு வசித்த 2000 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பதக்சான் மாகாண கவர்னர் ஷா வலியுல்லா அதீப் கூறுகையில், கடுமையான மழை காரணமாக மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்த 300 க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளன. இதில் வசித்த சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதில் மொத்தம் உள்ள வீடுகளில் 75 சதவீத வீடுகள் புதைந்துள்ளன என்றார்.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதுமான கருவி மற்றும் மண் தோண்டும் கருவிகள் இல்லாததால் அவர்களால் வேகமாக பணியைச் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். நிலச்சரிவு ஏற்பட்ட மாகாணம் இந்து குஷ் மற்றும் பாமீர் மலைத்தொடரிலும், சீனாவின் எல்லையிலும் அமைந்துள்ளது. மண் சரிவில் புதந்திருப்பவர்களை மீட்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்