அரிசி மானியத் திட்ட ஊழல் வழக்கு: தாய்லாந்து முன்னாள் பிரதமர் மீது விசாரணை தொடக்கம்

By ஏபி

அரிசி மானியத் திட்ட ஊழல் வழக்கு தொடர்பாக தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மீது அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் கடந்த 2014 மே மாதம் யிங்லக் ஷினவத்ரா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர் ஐந்து ஆண்டுகள் அரசியலில் ஈடுபடவும் நீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி பிரயுத் சான் சா புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் யிங்லக் ஷினவத்ரா ஆட்சியின்போது அரிசி மானியத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைநகர் பாங்காக்கில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் யிங்லக் ஷினவத்ரா ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில், எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று வாதிட்டார்.

பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே அவர் நிருபர்களிடம் பேசியபோது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன, ராணுவ ஆட்சியில் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது, நாட்டில் விரைவில் ஜனநாயகம் மலர வேண்டும், நான் நிரபராதி, இந்த வழக்கில் எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்துக்கு வளாக யிங்லக்கின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தாய்லாந்தில் வரும் 2016 ஆகஸ்ட் மாதம் பொதுத்தேர்தலை நடத்த தற்போதைய ராணுவ ஆட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகம் என்று அந்த நாட்டு அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

மேலும்