தன்பாலின உறவாளர் திருமணம்: அயர்லாந்தில் இன்று வாக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு

By ஏபி

அயர்லாந்து நாட்டில் தன்பாலின உறவாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கலாமா வேண் டாமா என்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.

கடந்த இரு மாதங்களாக நடை பெற்ற பிரச்சாரத்தின் முடிவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு களில் தன்பாலின உறவாளர் திருமணத்துக்கு அனுமதி வேண்டும் என்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்பாலின உறவாளர் திருமணத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நேற்று அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஆனால் அயர்லாந்தில் பொது வாக இப்படியான பொது வாக் கெடுப்புகளில் அதிகமான எண்ணிக் கையில் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்துவதில்லை. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் வாக்களிக்க முன்வருவதில்லை. இதனால் அதிகமான அளவில் வாக்காளர்கள் இந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டி யது அவசியம் என்று அரசு அதிகாரி களும், தன்பாலின உறவாளர் உரிமை செயற்பாட்டாளர்களும் கருதுகின்றனர்.

இந்த வாக்கெடுப்பு முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. இந்த வாக்கெடுப்புக்கு ரோமன் கத்தோலிக்க அமைப்பினர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்