மியான்மரில் சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் சுகாதார வசதி மசோதா, மியான்மர் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் பெண்கள், ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இடைவெளி விடுவதை இந்த சட்டம் கட்டாயம் ஆக்குகிறது. இந்த சட்டத்தால் பெண்கள் மட்டுமல்ல மதம் மற்று இன சிறுபான்மையினரும் அடக்குமுறைக்கு ஆளாகும் ஆபத்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. பழமைவாத புத்த துறவிகளின் நிர்பந்தத்தின் பேரில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சட்டம் உட்பட மியான்மர் அரசு திட்டமிட்டுள்ள 4 சட்டங்களை கைவிடவேண்டும், இதனால் சமூக அமைதி பாதிக்கும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டன.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டத்துக்கு மியான்மர் அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகமுள்ள இடங்களில் பிறப்பு இடைவெளி விதிமுறைகளை அமல்படுத்த பிராந்திய அதிகாரிகளுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago