அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை: 2 சிறுவர்கள் கைது

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம், செயின்ட் அகஸ்டின் நகர அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவரை கொள்ளை முயறிசியின்போது 2 சிறுவர்கள் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்க மாகாணமான ஃபுளோரிடாவில் உள்ள செயின்ட் அகஸ்டின் என்ற பகுதியில் உள்ள அங்காடியில் மானவ் தேஷி (30) என்ற இந்தியர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அங்காடிக்குள் நுழைந்த 2 சிறுவர்கள் கொள்ளையடிக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது, அதை தடுக்க முயன்ற மானவ் தேஷியை சிறுவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மானவ் தேஷியை 16 வயது மிக்க சிறுவன் சுட்டுக் கொன்றதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. சிறுவர்கள் இருவரும் முகமுடி அணிந்திருந்ததாக செய்தி சானல்களில் தெரிவிக்கப்பட்டன.

மானவ் தேஷி சமீபத்தில் தான் தனக்கு நிச்சயமான பெண்ணுடன் செயின்ட் அகஸ்டின் பகுதியில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மானவை சுட்டுக் கொன்ற சிறுவனையும், உடன் இருந்த மற்றொரு சிறுவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மானவ் கொல்லப்பட்டச் சம்பவம் ஃபுளோரிடாவில் வாழும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில், கடந்த மாதம் எரிவாயு நிலையத்தில் பணியாற்றிய சஞ்சய் படேல் (39) என்ற இந்தியர், அங்கு நடக்க இருந்த கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவில் துப்பாக்கியை உபயோகிக்கும் கலாச்சாரம் சிறுவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இதனால் அங்கு பல வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது ட்தொடர்கதையாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE