சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பல்மைரா என்ற நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் அந்த நகரத்துக்கு வழியாக இருக்கும் தத்மூர் என்ற பகுதியையும் தீவிரவாதிகள் தங்களது வசத்தில் வைத்துள்ளனர். சிரியா மற்றும் இராக்கின் பல நகரங்களை கைக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்மைரா நகரத்தை சிதைக்கக் கூடிய வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று சிரியாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கெனவே, இராக்கின் மொசூல் நகரை தங்களது வசத்தில் வைத்துக் கொண்டு அங்கிருந்த 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மெசபடோமிய கால பாரம்பரியச் சின்னங்களை அழித்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.
இந்த நிலையில் சிரியாவின் தொன்மையான பல்மைரா நகரின் மூன்றில் ஒரு பதியை ஐ.எஸ். தங்களது வளைவுக்குள் வைத்திருப்பதாகம் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்படுவதாகவும் ஐ.நா. கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago