நேபாள துயரத்தில் ஆதாயம் தேடுகிறதா இந்திய ஊடகங்கள்: ட்விட்டரில் பரவும் எதிர்ப்பு அலையால் அதிர்ச்சி

நேபாள நிலநடுக்க துயரத்தில் இந்திய ஊடகங்கள் ஆதாயம் தேடுவதாக ட்விட்டரில் எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது.

‘இந்திய ஊடகங்களே திரும்பிச் செல்லுங்கள்’ என்ற பெயரில் ட்விட்டரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹேஷ்டேக்கில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத் தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். 14 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். நிலநடுக்கத்துக்குப் பின் நேபாளத்துக்கு இந்தியா பெருமளவில் உதவி வருகிறது. ஏறக்குறைய இந்திய அரசுதான் அங்கு மீட்பு, உதவிப் பணிகளை முன் நின்று நடத்தி வருகிறது.

நிலநடுக்கம் தொடர்பான செய்தி களை சேகரிக்க இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான ஊடகங்கள் நேபாளத்தில் குவிந்துள்ளன. கடந்த ஒரு வாரமாகவே இந்திய ஊடகங்களில் நேபாள நிலநடுக்கம் தொடர்பான செய்திகளே பெருமளவில் இடம் பிடித்தன. நேபாளத்தின் துயரத்தை நமது துயரமாக பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியதற்கு உதாரணமாக ஊடகங்கள் நேபாள நிலநடுக்க செய்திகளை அளித்த விதம் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் எதிர்மறையான விமர் சனங்களை பெற்றுள்ளன. செய்தி களை சேகரிப்பதில் கருணை யற்ற வகையிலும், மனதைப் புண் படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதாக கருத்து எழுந்துள் ளது. ட்விட்டர் இணையதளத்தில் இது தொடர்பாக உருவாக்கப்பட் டுள்ள ஹேஷ்டேக்கில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்திய ஊடகங்களின் செயல் பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக் கூறியுள்ளனர்.

“இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கலாம். ஆனால் இந்திய ஊடகத்துறை யில் நேர்மையும், உண்மையும் மோசமான நிலையில் உள்ளது என்றும், மலிவான விளம்பரத்துக்காக வும், நேபாளத்துக்கு செய்த உதவியை பெரிய அளவில் பறை சாற்றிக் கொள்ளவுமே இந்திய ஊடகங்கள் விரும்புவது அப்பட்ட மாக தெரிகிறது. இது மிகவும் மோசமான செயல்” எனவும் ட்விட்டரில் கருத்துகள் பதிவேற்றப் பட்டுள்ளன.

நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட சுனிதா சாக்கியா என்பவர் தனது இணையதளத்தில் எழுதி யுள்ளதை சிஎன்என் தொலைக் காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ஊடகங்களும், ஊடக செய்தி சேகரிப்பாளர்களும் ஏதோ டி.வி. தொடரை படம் பிடிக்க வந்தது போல நேபாளத்தில் நடந்து கொள் கின்றனர். காயமடைந்தவர்களுக்கு உதவக் கூட அவர்கள் பெரிய அளவில் விரும்புவது இல்லை. அதே நேரத்தில் காயமடைந்தவர் கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவிய, உணவுப் பொருள் களை விநியோகிக்க உதவிய இந்திய ஊடக பணியாளர்களுக்கு நன்றி என்றும் சுனிதா கூறியுள்ளார்.

நேபாளத்தில் அனைவரும் இந்திய ஊடகங்கள் குறித்து குறை கூறவில்லை. எனினும் ஒரு சிலர் மனதில் இதுபோன்ற எண்ணங்கள் உள்ளன. நேபாள ஊடகங்கள் சிலவும் இவ்வாறு நினைக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் குந்தா தீக் ஷித் கூறியுள்ளார்.

எனினும் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் சதியாளர்கள் கூட இந்திய ஊடகங்கள் மீது திட்ட மிட்டு அவதூறு பரப்பலாம் என்று கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

2 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்