நேபாளத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட யு.எஸ். ஹெலிகாப்டர் மாயம்

நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 8 பேருடன் இயங்கிய ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை மாயமானது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரான ஹியூ மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இந்த ஹெலிகாப்டர் மாயமானது. ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் 2 நேபாள ராணுவ அதிகாரிகளும் இருந்தனர்.

கடைசியாக காத்மாண்டு விமான நிலையத்தோடு மாலை 3 மணி அளவில் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரவாக நடந்து வருகிறது. இருப்பினும் இதில் எந்த முன்னேற்றமான தகவலும் கிடைக்கவில்லை.

ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கவோ அல்லது நொறுங்கி விழுந்திருக்கக் கூடிய அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை என்று நேபாள போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக நேபாள செய்தி இணையதளத்தில் இன்று காலை தகவல் வெளியானது. ஆனால் அவற்றை நேபாள உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2000 பேர் காயமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE