பிரிட்டன் பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத்தில் இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட 10 எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய தேர்தலில் அதே எண்ணிக்கையிலான இந்திய வம்சாவழி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முறை எம்.பி.க்களாக பதவி வகித்த 10 பேரில் 9 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பால் உப்பல் என்பவர் மட்டும் தோல்வியை தழுவினார்.
இந்தத் தேர்தலில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்ட அவர் அமோக வெற்றி பெற்றார்.
மேலும் கடந்த முறை எம்.பி.க்களாக இருந்த கெய்த் வாஸ், வலேரி வாஸ், வீரேந்திர சர்மா, சீமா மல்ஹோத்ரா, லிசா நாண்டி, சாஜித் ஜாவித், பிரீத்தி படேல், அலோக் சர்மா, சைலேஷ் வாரா ஆகியோர் மீண்டும் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மருமகனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாழ்த்து:
"ரிச்மாண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற ரிஷிக்கு வாழ்த்துகள். அவரும் அக்ஷதாவும் (நாராயண மூர்த்தியின் மகள், ரிஷியின் மனைவி) கடினமாக உழைத்தார்கள். வில்லியம் ஹேகிற்குப் பிறகு ரிஷி அங்கு வெற்றி பெற்றுள்ளதால் அவருக்கு பெரிய கடமைகள் இருக்கின்றன. ஒரு எம்.பி.யாக அதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago