நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அளித்துக் கொண்டிருந்தபோது, ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது. அந்த ஹெலிகாப்டரின் சிதறல்கள் நேற்று முன்தினம் கைப்பற்றப் பட்டன. நேற்று அதில் பயணித்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
'ஹியூ' என்று பெயரிடப்பட்ட இந்த அமெரிக்க ஹெலிகாப்டரில் அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 6 பேரும், நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 2 பேரும் பயணித்தனர். கடந்த செவ்வாய்க் கிழமை, அந்த ஹெலிகாப்டர் நிவாரணப் பொருட்களை ஓரிடத்தில் வழங்கிவிட்டு, இன்னொரு பகுதிக்குச் செல்லும்போது அது மாயமானது. மாயமாவதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டரில் எரிபொருள் பிரச்சினை குறித்து தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை சரிகோட் பகுதிக்கு அருகில் உள்ள மலைமுகட்டில் ஹெலிகாப்டரின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சனிக்கிழமை அதில் பயணித்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. அவை விரைவில் காத்மாண்டுவுக்குக் கொண்டு செல்லப்படும் என்று நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 mins ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago