ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

By ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ்

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

ஆனால் பப்ளிக் பிராட்காஸ்டரான என்.எச்.கே. ரிக்டர் அளவுகோலில் 8.5 என்று பதிவானதாக கூறியுள்ளது.

ஜப்பான் உள்ளூர் நேரப்படி மாலை 8.30 மணியளவில் கட்டிடங்கள் ஒரு நிமிடத்துக்கு ஆட்டம் கண்டதாகவும் இதன் பின்னர் மக்கள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 7.8 என்ற ரிக்டர் அளவில் டோக்கியோவிலிருந்து 874 கிமீ தொலைவில் பசபிக் கடலில் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், பூமியின் மேற்பரப்புக்குக் கீழே சுமார் 676 கிமீ அடியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பசிபிக் கடலில் நெடுந்தொலைவில் இது மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது டோக்கியோவுக்கு 874 கிமீ தொலைவில் ஒகாஸ்வரா தீவில் இதன் மையம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

டோக்கியோவின் நரிதா விமான நிலையத்தின் இரு ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ-ஒசாகா புல்லட் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தாக்கம் குறைவான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், ஆண்டொன்றுக்கு உலகில் ஏற்படும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் ஜப்பானில் மட்டும் 20% நிலநடுக்கங்கள் உலுக்கி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்