மலேசிய வனப் பகுதியில் உயிரிழந்த 139 அகதிகளின் உடல்கள் மீட்பு

By ஏஎஃப்பி

மலேசியாவில் இதுவரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.

ஆள் கடத்தல் கும்பல் மூலம் அழைத்துச் செல்லப்படும் அவர் கள், மலேசியாவின் அடர்ந்த வனப்பகுதியில் தங்கவைக்கப் பட்டு பின்னர் நகருக்குள் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் மலேசியாவின் புகிட் வாங் பர்மா, பெரில்ஸ் வனப்பகுதியில் சுமார் 28 முகாம் கள் செயல்பட்டுள்ளன. அவற்றை நடத்தியவர்கள் தப்பியோடிவிட் டனர். முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள் பசி, நோயால் உயிரிழந் துள்ளனர். அவர்கள் வனப்பகுதி களில் ஆங்காங்கே புதைக்கப் பட்டுள்ளனர்.

சம்பவ பகுதியை மலேசிய அதிரடிப் படை போலீஸார் அண்மையில் கண்டுபிடித்தனர். அப்பகுதிகளில் இருந்து இது வரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை மலேசிய உள்துறை இணை அமைச்சர் வான் ஜூனைதி துங்கு ஜாபர் நிருபர்களிடம் தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்