சிறிய வடிவிலான அணு ஆயுதங்களை உருவாக்கி சாதனை படைத்திருப்பதாக வட கொரியா கூறியுள்ளது. இவற்றை ஏவுகணைகள் மூலம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வடகொரியாவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆணை யம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்களின் அணு ஆயுத கையிருப்பை பல்வேறு வகைகளில் அதிகரிப்பதற்காக, சிறிய வடிவிலான அணு ஆயுதங்களை உருவாக்க, நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே நாங்கள் முயற்சித்து வருகிறோம். தற்போது அதனை சாதித்துள்ளோம்.
இந்த வகையான ஆயுதங்களை ஏவுகணைகள் மூலம் குறுகிய, மத்திம தூரங்களில் உள்ள எதிரிகளின் இலக்குகளை மட்டுமல்லாது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்க முடியும். இந்த உண்மையை நாங்கள் மறைக்க விரும்பவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
மே 8ம் தேதி வடகொரியா மேற்கொண்ட நீர்மூழ்கி ஏவுகணை பரிசோதனைக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago