இலங்கையில் ஆளும் கூட்டணி கட்சிகளிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராக அதிபர் சிறிசேனாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளனர். இருவரும் இணைந்தே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை தேர்தலில் தோல்வியடைச் செய்தனர்.
கடந்த ஜனவரியில் அதிபர் சிறிசேனா பதவியேற்ற பிறகு ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலும் பல்வேறு முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வும் 19-வது அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபரைவிட பிரதமருக்கு அதிக அதிகாரம் அளிக்க ரணில் விக்ரமசிங்க காய் நகர்த்தி வருவதாக இலங்கை சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய கட்சி நிராகரித்துள்ளது. 19-வது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவரும் வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான அஜித் பெராரா கூறியபோது, சிறிசேனா ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன, இன்னமும் 19-வது சட்டத் திருத்தம் அமல் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago