அதி தீவிர பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அமெரிக்க வெள்ளை மாளிகை கம்யூட்டர்களில் ரஷ்ய ஹேக்கர்கள் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் கம்ப்யூட்டர்கள் ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டதாக வெள்ளை மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் குறிப்பட்டச் சம்பவத்தை தெரிவிக்காத அந்த அறிக்கையில், இதற்கு காரணமாக ரஷ்ய ஹேக்கர்களை சுட்டிக் காட்டப்பட்டது.
முன்னதாக, அமெரிக்க மாகாண கம்ப்யூட்டர்களில் ரஷ்ய ஹேக்கர்கள் ஊடுருவியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளை மாளிகை கம்ப்யூட்டர்களிலும் அவர்களே ஊடுருவியதாக மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மார்க் ஸ்ரோ கூறும்போது, "புதிய ஹேக்கர்களை கண்காணிப்பது சிறிது சவாலானதாக உள்ளது. இதற்கு காரணமானவர்கள் குறித்து தற்போது தெரிவிக்க முடியாது.
வெள்ளை மாளிகை கம்ப்யூட்டர்கள் இரு பிரிவுகள் கொண்டுள்ளன. ஒன்று, வகைப்படுத்தப்படாதவை. மற்றொன்று உயர்மட்ட ரகசிய கோப்புகள் கொண்டவை. எத்தகைய ஹேக்கர்களாக இருந்தாலும் எங்களது உயர்மட்ட ரகசிய கோப்புகளை ஊடுருவி திருட முடியாது என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago