ஏமன் போரில் சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தானுக்கு அழைப்பு

By ராய்ட்டர்ஸ்

ஏமனில் சவுதி அரேபியா நடத்தி வரும் போரில் இணைய பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

ஏமனில் வளைகுடா நாடுகள் நடத்தும் போரில் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை க்வாஜா ஆஸிஃப் தெரிவித்தார். போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், படை வீரர்களையும் அனுப்ப சவுதி அரேபியா கேட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சன்னி பிரிவு மக்கள் அதிகம் கொண்ட சவுதி அரேபியா நாட்டின் தலைமை அதே பிரிவு மக்கள் அதிகம் வாழும் பாகிஸ்தானும் இந்த போரில் இணைய வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சவுதி அரேபிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்படுபவர்களை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏமனில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து அதிபர் ஹதி ஆதரவான படைகளும் வளைகுடா கூட்டு படைகளும் ஹவுத்தி கிளர்ச்சிப் படையும் சண்டையிட்டு வருகின்றனர். ஹவுத்திக்களை குறிவைத்து தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அங்கு அவர்களது ஆதிக்கம் வலுவானதாக திகழ்வதால் போர்க்கு முடிவு ஏற்படாமல் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்