ஏமனில் ஆதிக்கம் செலுத்தும் ஷியாப் பிரிவு ஹவுத்தி தலைவரை உயிரோடு அல்லது பிணமாக கொண்டு வருபவருக்கு 20 கிலோ தங்கம் வழங்கப்படும் என்று அரேபிய தீபகற்ப அல்-காய்தா இயக்கம் அறிவித்துள்ளது.
ஏமனில் அதிபர் ஹத்தி ஆட்சிக்கு எதிராக திரண்டு முக்கிய நகரங்களை வசப்படுத்தியும் சன்னி பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியும் ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சிப்படை சண்டையிட்டு வருகிறது. இவர்களுக்கு எதிராக அந்நாட்டில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதலை கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கியது.
தீவிர தாக்குதல் நடத்தி வரும் போதிலும் போரில் பல வளைகுடா நாடுகள் இணைந்திருக்கும் நிலையிலும் ஹவுத்தி படையினரை தற்காலிகமாகவே எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சிப்படை தலைவர் அப்தெல் மாலிக் அல்- ஹவுத்தியின் தலைக்கு ஈடாக அந்நாட்டு அல் - காய்தா இயக்கம் 20 கிலோ தங்கம் தருவதாக அறிவித்துள்ளது.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள அல் - காய்தா அமைப்பு இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளதாக சைட் கண்காணிப்பு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அல் - காய்தா இயக்கத்தின் வேராகக் சவுதி அரேபிய தீபகற்பம் செயல்படுகிறது. ஏமனில் தற்போது மோசமான சூழல் நிலவும் நிலையில், இந்த இயக்கம் ஏற்கெனவே ஹட்ரமவுத் மாகாணத்தில் உள்ள சிறையைத் தகர்த்து தங்களது இயக்கத்தின் முக்கியத் தலைவர் கலீத் பத்ராஃபி உட்பட 300 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்தனர்.
சிறையிலிருந்து தப்பித்திருக்கும் கலீத் பத்ராஃபி, அரேபிய தீபகற்பத்தில் அல்-காய்தாவின் முக்கியத் தலைவர் ஆவார். கடந்த 2011-2012 வரை நடந்த ஏமன் உள்நாட்டு பிரச்சினையில் அரசை எதிர்த்து பெரும் பகுதியை இவர் தலைமையிலான அல்-காய்தா ஆதிக்கத்துக்கு கொண்டு வந்தவர் ஆவார்.
தற்போது அல் - காய்தா வெளியிட்டிருக்கும் பகிரங்க அறிவிப்பும் சிறைத் தகர்ப்பு நடவடிக்கையும் கவனிக்க வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago