சவுதி அரேபிய வான்வழி தாக்குதல் எதிரொலி: ஏமன் அதிபர் மாளிகையில் இருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்

By ஏஎஃப்பி

சவுதி அரேபிய வான்வழித் தாக்குதலுக்கு பின்னர், ஏமன் அதிபர் மன்சூர் ஹதியின் மாளிகை உள்ள ஏடனிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அதிபர் மன்சூர் ஹதியின் அரசை முடக்கி சண்டையிட்டு வருவதால் அவர்களுக்கு எதிராக சவுதி அரேபியப் படை போர் நடத்தி வருகிறது. முக்கிய துறைமுக நகரான ஏடன், அங்கிருக்கும் அதிபர் மாளிகையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்தனர்.

இந்த நிலையில் அதிபர் ஹதி ஆதரவாளர்களுடன் சவுதி அரேபியா நடத்திவரும் இரவு நேர வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதாக தகவல் வெளியானது.

இது குறித்து பெயர் குறிப்பிடமால் பேசிய ஏடன் நகர அதிகாரி, "அல்-மாஷிகி மாளிகையிலிருந்து இன்று அதிகாலை அளவில் ஹவுத்தி கிளர்ச்சிப்படை போராளிகள் வெளியேறினர்" என்றார்.

உள்நாட்டு பாதுகாப்புப் படையும் சுவுதி அரேபிய செய்தி நிறுவனங்களும் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து மாளிகை மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.

ஷியாப் பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி அரேபிய படையுடன் முன்னாள் ஏமன் அதிபர் அலி அப்துல்லாவின் ஆதரவுப் படைகள் கடந்த மார்ச் 26-ஆம் தேதி ஏமனில் போரை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்