இந்தியர்களுக்கு முன்னுரிமை: டிசிஎஸ் நிறுவனம் மீது அமெரிக்காவில் வழக்கு

By ஐஏஎன்எஸ்

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் அமெரிக்க பணியாளர்களுக்கு எதிராகவும், தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அதன் முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ஹெல்ட், டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். இவர் சான் பிரான்ஸிஸ்கோ தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “அமெரிக்காவில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 14,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் 95 சதவீதம்பேர் தெற்காசியர்கள், குறிப்பாக பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்.

அந்நிறுவனம் வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் அமெரிக்க ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுகிறது. ஏராளமான ஹெச்-1பி விசா பணியாளர்களையும், தெற்காசியர்களையும் பணியமர்த்துவதன் மூலம் பாரபட்சம் காட்டுகிறது.

அங்கு தெற்காசியர்கள் அல்லாத சிலரும் பணிபுரிகின்றனர். வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் பதவி உயர்வு, வேலை நீக்கம் ஆகியவற்றில் தெற்காசியர்கள் அல்லாதவர்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறது.

கடந்த 2011 முதல் 2013 வரை சுமார் 21,000 ஹெச்-1பி விசாக்களை அளித்துள்ளது. இவர்கள் அனைவருமே தொடக்க நிலை இந்தியப் பணியாளர்கள்.

அங்கு பணிபுரிந்த 20 மாதங்களும் மிக மோசமான அனுபவமே கிடைத்தது. ஒரு வீட்டு உதவியாள் அளவுக்கான பொறுப்புகளே எனக்கு அளிக்கப்பட்டன. அமெரிக்கர்களுக்கு எதிரான மனப்பான்மை உணர்வை நான் அங்கு அனுபவித்தேன்.

டாடா நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பிலுள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளுள் ஒருவர், வேலைக்கு ஆள் எடுப்பவர்களிடம் இந்தியர்கள் மீது கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார். அவருக்கு அமெரிக்கர்களைப் பிடிப்பதில்லை. அமெரிக்கர்களை விட இந்தியர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்கள், மிகச்சிறந்த தகுதியுடையவர்கள் எனக் கருதுகிறார்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்