பிரான்ஸில் நான்கு நாட்கள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நேற்று ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனியின் ஹன்னோவர் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு கண்காட்சியை ஜெர்மனியும் இந்தியாவும் இணைந்து நடத்துகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதன் தொடக்க விழாவுக்காக பிரதமர் மோடி நேற்று ஹன்னோவர் நகருக்குச் சென்றார். பெருந்திரளான இந்தியர்கள் விமான நிலையத்துக்கு திரண்டு வந்து அவரை வரவேற்றனர். அவர் தங்கியுள்ள ஹோட்டல் முன்பும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கூடி அவருக்கு ஆதரவாக ‘மோடி, மோடி’ என்று உற்சாக குரல் எழுப்பினர்.
பின்னர் ஹன்னோவர் நகரில் நடைபெற்ற ஜெர்மன் தொழிலதிபர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் இணையுமாறு தொழிலதிபர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் இணைந்து ஹன்னோவர் தொழில் கண்காட்சி யைத் தொடங்கிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago