மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முகமது புகாரி (72) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அதிபராக இருந்த குட்லக் ஜோனத்தன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள் ளார். இதன் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்துக்கு அவர் வழி ஏற்படுத்தியுள்ளார். ஜோனத்தன் நேற்று தொலைக் காட்சி மூலம் மக்களுக்கு ஆற்றிய உரையில், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவதாக உறுதி அளித்திருந்தேன். எனது வாக்கை காப்பாற்றி விட்டேன்” என்றார்.
ஆளும் கட்சியிடமிருந்து அமைதியான முறையில் எதிர்க்கட்சி ஆட்சிப் பொறுப்பை பெறுவது நைஜீரிய வரலாற்றில் இதுவே முதல்முறை. இதன் மூலம் அந்நாட்டில் ஜனநாயகம் வேரூன்றும் வாய்ப்புகள் ஏற் பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
புகாரியின் வெற்றியை நாடு முழுவதும் அவரது ஆதரவாளர் கள் கொண்டாடி வருகின்றனர்.
நைஜீரிய அதிபர் தேர்தல் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தல் முடிவை தேசிய தேர்தல் ஆணையத் தலைவர் அட்டாஹிரு ஜெகா நேற்று அறிவித்தார். இதன்படி முகமது புகாரி 15,424,921 (53.95%) வாக்குகளும், ஜோனத்தன் 12,853,162 (44.99%) வாக்குகளும் பெற்றனர்.
புகாரி இதற்கு முன் நைஜீரியாவை 1980-களில் சிறிது காலம் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்தவர் ஆவார்.
1960-ல் நைஜீரியா சுதந்திரம் அடைந்தது முதல் 1999 வரை அங்கு ராணுவ ஆட்சி நடை பெற்றது. 1999-ல் அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டது முதல் தற் போது வரை தொடர்ந்து 16 ஆண்டுகளாக ஜோனத்தன் கட்சி ஆட்சி செய்தது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago