ஜப்பானில் 2 அணு உலைகளை மீண்டும் இயக்கத் தடை

By ஏபி

ஜப்பானில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த 2 அணு உலைகளை மீண்டும் இயக்க அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. அதன் காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள பல அணு உலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

அந்த விபத்தைத் தொடர்ந்து ஜப்பானில் உள்ள 48 அணு உலைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வேறு இரண்டு அணு உலைகளைத் தவிர மற்ற எந்த அணு உலைகளும் மீண்டும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், டகாஹமா அணுமின் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட எண்.3 மற்றும் எண்.4 ஆகிய‌ 2 அணு உலைகளை மீண்டும் இயக்க ஜப்பான் அரசு முயற்சிக்கிறது.

அணு உலைகளைப் பாதுகாப்பாக இயக்க புதிதாக தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அணு ஆற்றல் ஒழுங்குமுறை வாரியம் கூறியுள்ளது.

ஆனால் உள்ளூர் மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு எதிராக புகுயி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், "புதிய தர நிர்ணயங்களை ஏற்படுத்துவதால் மட்டும் அணு விபத்துக்களைத் தடுத்து நிறுத்த முடியாது", என்று கூறி வாரியத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்