ஏமனில் செங்கடற் பகுதியில் உள்ள ஹொதைதா துறைமுகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் தொழிற்சாலையில் பணிபுரிந்த 37 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவலை வெளியிட்ட சுகாதாரத் துறை, இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்த தாக்குதல் சம்பவம் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவான மக்கள் அதிகம் வசிக்கும் ஹொதைதாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஹொதைதா பால் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் என்று அருகாமையில் இருந்த பொதுமக்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சன்னி பிரிவு மக்கள் வாழும் மற்ற பகுதிகளுக்கு ஆக்கிரமிப்பதை தவிர்க்கும் நோக்கத்தோடு இந்தத் தாக்குதலை சவுதி ராணுவப் படை நடத்தியதாக நம்பப்படுகிறது.
தாக்குதலை நடத்தியது கூட்டணிப்படை என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டுவீச்சுக்கு காரணம் என மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 7 நாட்களாக இரவும் பகலுமாக ஹவுத்தி படையினராலும் வளைகுடா கூட்டமைப்பு படைகளாலும் நடத்தப்பட்டு வரும் தாக்குதல் முடிவுக்குவராமல் உள்ளது. இரு தரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை முனைப்பு காட்டவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago