மத்திய தரைக்கடல் படகு விபத்து: மீட்கப்பட்ட உடல்கள் மால்டா நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன‌

By ராய்ட்டர்ஸ்

லிபியா கடற்கரைக்கு அருகே மத்திய தரைக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று மால்டா நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வரப்பட்டன.

கடந்த சனிக்கிழமை சுமார் 700 பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு படகு, லிபியா கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்தப் பகுதியில் அப்போது அங்கு பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றைப் பார்ப்பதற்காக, பல பயணிகள் படகின் ஒரு பக்கத்துக்குச் சென்றனர். அதன் காரணமாக சமநிலை இழந்த படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இதுவரை 28 பேரை இத்தாலிய கடலோர காவல்படை உயிருடன் மீட்டுள் ளது. இவர்கள் அனைவரும் மால் டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் கள். சில நாட்களுக்குப் பின்னர் இவர்கள் இத்தாலிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 24 உடல்களையும் இத்தாலிய கடலோர காவல்படை மீட்டுள்ளது.

லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருப்பதால், அங்கு இருந்து மக்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். இவ்வாறு அகதியாகச் செல்வதற்கு மக்கள் பல்லாயிரம் டாலர்களை கட்டணமாக வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மால்டாவின் பிரதமர் ஜோசப் மஸ்கட் கூறும் போது, "லிபியாவில் இருந்து இவ்வாறு மக்கள் அகதிகளாக அழைத்து வரப்படுவதைத் தவிர்க்க ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல ஐரோப்பியர்களும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்த ஆண்டில் மட்டும் மத்திய தரைக் கடல் வழியாக‌ ஐரோப்பாவில் குடியேற முயற்சித்த 1,500 பேருக்கும் அதிமானவர்கள் இதுபோன்ற படகு விபத்துகளில் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு முன்பு சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு, இந்த ஆண்டு இதுவரை இத்தாலி கடற்கரைக்கு 20 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்கள் வந்திருப்பதாகவும், அவர்களில் 900 பேர் இறந்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்