நேபாள நிலநடுக்க பலி 5,500 ஆனது: மழையால் மீட்புப் பணிகள் பாதிப்பு

By ராய்ட்டர்ஸ்

நேபாள நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 5,500-ஐ தாண்டியது. தற்போது கனமழை காரணமாக, அந்நாட்டில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 25-ம் தேதி) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு தற்போதைய நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 5,489- ஆக அதிகரித்துள்ளது. நேபாள உள்துறை அமைச்சக கணக்கின்படி, சுமார் 11,000 பேர் படுகாயங்களுடன் உள்ளனர்.

அத்துடன், இந்திய மற்றும் திபெத் நிலப்பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 80-க்கும் அதிகமானோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமாலய தேசமான நேபாளத்தின் பல்வேறு குக்கிராமங்களுக்குள் மீட்பு பணி அதிகாரிகள் சென்று நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மழை குறுக்கிட்டதால் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாது மோசமான நிலையில் இருக்கும் காத்மாண்டு சுற்று வட்டார கிராமங்களில் மீட்பு பணிகள் இன்று தொடர்ந்தது. ஆனால் கன மழை தொடர்ந்ததால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மாயமானவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை

இதனிடையே, பேரழிவு மேலாண்மை குழுவின் முதன்மை இயக்குநர் கூறும்போது, "நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி மாயமான மக்கள், இனியும் உயிரோடு மீட்கப்பட வாய்பில்லை. இங்கு சீரமைப்பு பணிகளுக்கு மழை கூடுதல் இடையூறாக உள்ளது. இயற்கை நமக்கு எதிராக இருக்கிறது. சிரமமதான்" என்றார்.

6 லட்சம் வீடுகள் நாசம்

ஐ.நா. அறிக்கையின்படி, சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 600,000 வீடுகள் முற்றிலும் இடந்து நாசமானதாகவும், 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்துக்கு பின்னர் நேபாள மக்கள் பெரும்பாலானோர் வெட்ட வெளியில் வாழும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், குறைந்தது 20 லட்சம் மக்கள் கூடாரங்கள், தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ பொருகளுக்காக காத்திருக்கும் நிலையில் உள்ளனர். அடுத்த 3 மாத கால அளவுக்கு இவர்களுக்கான தேவைகள் கைவசம் இல்லை என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்