கென்யாவில் உள்ள கர்ரிஸா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 15 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டார் காயமடைந்ததாக தெரிகிறது.
விடுதிக்குள் இருக்கும் மாணவர்களை தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பிணைக் கைதிகளாக கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கெர்ரிஸா பல்கலைக்கழக விடுதிக்குள் ஆயுதம் ஏந்திய 5 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
உடனடியாக ராணுவத்தினரும் போலீஸாரும் பல்கலைக்கழகத்தைச் சுற்றி வளைத்து பாதுகாக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்களைத் தாண்டி பல்கலைக்கழகத்தினுள் அந்த நபர்கள் புகுந்தனர். தொடர்ந்து பல மணி நேரமாக இரு தரப்புக்கும் சண்டை நடந்து வருகிறது.
இது தொடர்பாக போலீஸார் தெரிவித்த முதற்கட்ட தகவலில், "பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்த நபர்களை வெளியேற்றும் முயற்சி நடந்து வருகிறது. உள்ளே இருக்கும் நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆலோசிக்கிறோம்.
ஆனால் அவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதால் எங்களால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை குறித்த அச்சமும் எங்களுக்கு உள்ளது. உள்ளே எவ்வளவு மாணவர்கள் இருக்கின்றனர் என சரியாக தெரியவில்லை" என்றார்.
இதனிடையே பல்கலைக்கழகத்தில் இருந்த சுமார் 50 மாணவர்கள் வெளியேறியதாகவும் மேலும் பலர் பிணைக் கைதிகளாக சிக்கி கொண்டிருப்பதாகவும் ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் பிணைக் கைதிகள் குறித்தும் சந்தேக நபர்கள் குறித்தும் எந்த உறுதியான தகவலையும் கென்ய அரசு தெரிவிக்கவில்லை.
பொதுமக்கள் யாரும் கர்ரிஸா பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் கென்யா தலைநகர் நைரோபி பெருவணிக வளாகத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரு இந்தியர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தொடர்ந்து அங்கு அவ்வப்போது சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷபாப் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கர்ரிஸா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளும் அல்-ஷபாபை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago