சூடான் தேர்தலில் அதிபர் ஒமர் 94 % வாக்குகள் பெற்று வெற்றி: 25 ஆண்டுகளாக ஆட்சியில் தொடர்கிறார்

By ராய்ட்டர்ஸ்

ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்ற தேர்தலில் அந்நாட்டு அதிபர் ஒமர் ஹசன் அகமத் அல்-பஷீர் 94.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

71 வயதாகும் ஒமர் 1989-ம் ஆண்டு முதல் சூடான் அதிபராக உள்ளார். இப்போது மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். முக்கிய எதிர்க் கட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்ததும் ஒமர் இவ்வளவு அதிக வாக்குகள் பெறுவதற்கு ஒரு காரணம்.

ஒமர் ஆட்சியை எதிர்த்தவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இனப்படு கொலை குற்றச்சாட்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒமருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

எனினும் தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒமர் மறுத்துள்ளார். நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தை அனுமதிப்பது இல்லை. எதிர்கட்சிகளை முடக்கி வருகிறார் என்பது போன்ற குற்றச் சாட்டுகளும் அவர் மீது உள்ளன.

ராணுவ தளபதியாக இருந்து சூடான் அதிபர் பதவிக்கு வந்த ஒமர் தொடக்க காலத்தில் எகிப்து ராணுவ அகாடமியில் படித்து அந் நாட்டு ராணுவத்தில் பணியாற்றி னார்.

பின்பு சூடான் திரும்பி அங்கு ராணுவத்தில் முக்கிய பதவி வகித்தார். 1989-ல் ராணுவ புரட்சி மூலம் சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இப்போது வரை அதனை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்