போதைப்பொருள் வழக்கு: 7 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா

By ஏஎஃப்பி

சர்வதேச நாடுகளின் நிர்பந்தங்களை மீறி, போதைப் பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 வெளிநாட்டினருக்கு இந்தோனேசியா தண்டனையை நிறைவேற்றியது.

வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 வெளிநாட்டினருக்கு நேற்று தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ஜேன் வெலோஸா என்ற பெண்ணுக்கு 11 மணிநேர அவகாசம் அளித்து தண்டனை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து 2 ஆஸ்திரேலியர்கள், பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 4 பேர் என 7 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுடன் உள்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தலைமையில் சர்வதேச சமூகம், இவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்தோனேசியா இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவதை ஆதரித்து வரும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால் தங்கள் நாட்டில் நெருக்கடியாக சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.

இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் முகம்மது பிரசெட்யோ நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “போதைப் பொருள் பயன்பாட்டால் எங்கள் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே கொடூர போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக நாங்கள் போரிட்டு வருகிறோம். மரண தண்டனை நிறைவேற்றுவது மகிழ்ச்சியான விஷயம் அல்ல. என்றாலும் போதைப்பொருள் அபாயத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற இதை செய்யவேண்டியுள்ளது” என்றார்.

போதைப் பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 ஆஸ்திரேலியர்களுக்கு மன்னிப்பு வழங்காவிடில் தூதரை திரும்ப அழைத்துக்கொள்வோம் என ஆஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுபற்றி முகம்மது பிரசெட்யோ கூறும்போது, “இது ஒரு தற்காலிக எதிர்விளைவு” என்றார்.

இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்றிய இந்தோனேசிய அரசின் செயலுக்கு ஆஸ்திரேலியா பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

4 days ago

மேலும்