தான்சானியா நாட்டில் சலாலா மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாயினர்.
இதுகுறித்து மாவட்ட ஆணையர் பென்சன் மம்பேசாயா கூறும்போது, "இந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள ஒரு பகுதியில் சில பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த குழியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் காரணமாக, அவர்கள் மண்ணுக்குள் புதைந்து போயினர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 19 பேரின் உடல்களை மீட்டுள்ளோம்" என்றார்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் அதிக அளவு தங்கம் உற்பத்தி செய்யக் கூடிய நான்காவது நாடாக தான்சானியா உள்ளது. அந்த நாட்டுக்கு அந்நியச் செலாணியை ஈட்டுத் தருவதில் தங்கம் மிக முக்கிய இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago