கென்யாவை ரத்தவெள்ளத்தில் மிதக்க வைப்போம்: அல்-ஷபாப் மிரட்டல்

By ஏஎஃப்பி

கென்ய பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தி 150 பேரை படுகொலை செய்த அல்-ஷபாப் தீவிரவாதிகள் அந்த நாட்டை ரத்தவெள்ளத்தில் மிதிக்கவிட போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

கென்யாவில் உள்ள கர்ரிஸா பல்கலைக்கழகத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பேர் பலியாகினர். இவர்களில் 143 பேர் மாணவர்கள். தவிர 2 போலீஸ்காரர்கள், ஒரு ராணுவ வீரர், ஒரு காவலர் என 4 பேர் பலியாகினர். இந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்திய அல்-ஷபாப் தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டலை வெளியிட்டுள்ளனர்.

அதில், "கர்ரிஸா பல்கலைக்கழக தாக்குதல் ஆரம்பம்தான். உங்களது பாதுகாப்புக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. தாக்குதலை தவிர்க்க உங்களுக்கு எந்த வாய்ப்பு கிடைக்காது. உங்கள் நகரங்களில் இது போல பல பகிரங்க தாக்குதல் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் கென்ய தலைநகர் நைரோபி பெருவணிக வளாகத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் இரு இந்தியர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தொடர்ந்து அங்கு அவ்வப்போது சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷபாப் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இது போன்ற தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்