விமான விபத்து துணை விமானியின் சதித் திட்டமா?

By ஏஎஃப்பி

‘ஜெர்மனி விங்ஸ்’ நிறுவனத் துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் 150 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமானத்தின் உடைந்த பாகங் களும், பயணிகளின் உடல்களும் மலைப்பகுதியில் சிதறி கிடக்கின் றன. அவற்றை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட விமானி அறையின் கருப்பு பெட்டி யில் பதிவான குரல் பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறும்போது, “இரண்டு விமானி களில் ஒருவர் வெளியே சென்று விட்டு மீண்டும் திரும்பியபோது விமானிகள் அறை உள்ளே பூட்டப் பட்டு இருந்தது. கதவை தட்டிய போது உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை” என்றனர்.

விபத்துக்கு முன்னதாக, தலைமை விமானி வெளியில் வந்ததும் துணை விமானி அறையை பூட்டிக்கொண்டு வேண்டுமென்றே விமானத்தை மலை மீது மோதி தகர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்