தீவிரவாதத் தாக்குதல் அனைத்துக்கும் தங்களை காரணமாக்கிப் பேசுவது சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது என்று இந்தியாவைக் குறிப்பிடும்படியாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் விரிசல் இருப்பதாக அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் பேசிய பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் கூறும்போது, "தீவிரவாதத்தால் பாகிஸ்தான் நிறைய இழந்துள்ளது.
தீவிரவாத நடவடிக்கையைத் தடுக்க பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மற்ற எந்த நாடும் செய்திட முடியாத அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் செய்து வருகிறது.
இதையே மற்ற நாடுகளிலிருந்து நாங்களும் எதிர்ப்பார்க்கிறோம். தீவிரவாத நடவடிக்கைகள் அனைத்துக்கும் பாகிஸ்தான் மீது குறை கூறுவதை ஏற்க முடியாது. தீவிரவாத வழக்கு தொடர்பான விசாரணையை முதலில் இந்தியா நடத்த வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago