சோமாலியாவில் உணவகம் சிறைப்பிடிப்பு: தீவிரவாத தாக்குதலுக்கு 17 பேர் பலி

By ஏபி

சோமலியாவில் கடந்த 12 மணி நேரமாக தீவிரவாதிகள் உணவகத்தை சிறைப் பிடித்து நடத்திய தாக்குதல் முடிவுக்கு வந்தது. தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 17 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் உள்ள உணவகத்தை அல்-ஷபாப் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சிறைப் பிடித்தனர். சுற்றுலா பயணிகள், வெளிநாட்டுத் தூதர்கள் தங்கியிருந்த அந்த உணவகத்தை பயங்கர ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தங்களது வசத்துக்குக் கொண்டு வந்தனர்.

ஓட்டல் அருகே வாகன நிறுத்தத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தையும் அவர்கள் வெடிக்கச் செய்தனர். உணவகத்தினுள் இருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 17 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைப் பிடிக்கப்பட்ட உணவகத்தை மீட்க அமெரிக்க நேட்டோ படைகள் உதவிய நிலையில் 12 மணி நேரத்துக்கு பின்னர், தீவிரவாதிகள் வசம் இருந்த உணவகம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்