நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய துருக்கிய விமானம், பனிமூட்டம் காரணமாக வழுக்கி, ஓடுபாதையிலிருந்து விலகி அருகில் இருந்த வயல்வெளியில் இறங்கி மோதி நின்றது.
விமானத்தில் இருந்த 224 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஓடுபாதையிலிருந்து சறுக்கியபடியே விலகிய விமானம் அருகில் இருந்த புல்வெளியில் மோதி நின்றது. பயணிகள் முகத்தில் பெரும் பீதி நிலவியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருகில் இருந்த புல்வெளியில் மோதி நின்றதால் விமானம் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து ஓடுபாதை பிற விமானங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விமானம் புல்வெளித்தரையில் மோதி நின்றதையடுத்து கேபின் முழுதும் புகை மணடலமாகக் காட்சியளிக்க பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
2 நாட்கள் பெய்த மழையால் காத்மண்டூ திரிபுவன் விமான நிலையத்தின் ஓடுபாதை வழுக்குப்பாதையாக மாறியிருந்ததோடு கடும் பனிமூட்டம் இருந்தது.
முதல் முறை தரையிறங்க முடியாமல் அரை மணி நேரம் வானில் வட்டமிட்ட இந்த ஏர்பஸ் விமானம் 2ஆம் முறை தரையிறங்கியபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. தரையிறங்கும் போது விமானத்தின் முன் டயர் வெடித்துள்ளது. சரியாக தரையிறங்க முடியாததால் இது நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து எப்படி நேரிட்டது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago