இலங்கையில் 3 நாள் பயணத்தை துவக்கினார் பிரதமர் நரேந்திர மோடி: சிறிசேனா, ராஜபக்சவை சந்திக்கிறார்

By பிடிஐ

செசல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.25 மணியளவில் இலங்கை சென்றடைந்தார்.

மொரீஷியஸில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் வந்தடைந்த மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் தனித்தனியே சந்திக்கிறார். முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, எதிர்க்கட்சித் தலைவர் நிர்மக் சிறிபால டி சில்வா அகியோரையும் மோடி சந்திக்கவுள்ளனர்.

இதற்கிடையில், பிரதமர் மோடியை, முன்னாள் அதிபர் ராஜ்பக்ச சென்று சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சதிப்புகளைத் தொடர்ந்து இன்று மதியம் மோடி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். 1979-ல் அபோதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு மோடிதான் அங்கு உரையாற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முதலில் உரையாற்றிய வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் ஜவஹர்லால் நேரு.

பலத்த பாதுகாப்பு:

மோடி வருகையை ஒட்டி இலங்கையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் விடுதலை:

நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் இருந்து 86 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று பிறப்பித்தார். அவரது உத்தரவை ஏற்று நீதிமன்றம் மீனவர்களை விடுதலை செய்தது.

யாழ்ப்பாணம் செல்கிறார்

பிரதமர் மோடி, போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு செல்கிறார். யாழ்ப்பாணத்தில், தமிழ் தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். அணுராதபுரம் பகுதிக்கும் மோடி செல்வார் எனத் தெரிகிறது.

இலங்கையில் போர் முடிந்த பிறகு யாழ்ப்பாணம் செல்லும் இரண்டாவது தலைவர் மோடியாவார். முன்னதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்