‘வீடு விலைக்கு வாங்கினால், திருமணத்துக்குப் பெண் இலவசம்’ என்று இணையதளத்தில் வெளியான விளம்பரத்தால் இந்தோனேசியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சலீமேன் பகுதியைச் சேர்ந்தவர் வினா லியா (40). கணவனை இழந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அழகு நிலையம் வைத்துள்ளார். இவருக்கு ஜாவா கடலோரப் பகுதியில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை விற்க முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து இணையதளத்தில் விளம்பரம் வெளியானது. அதில், ‘ஓரடுக்கு மாடி வீடு, 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் உள்ளன. கார் நிறுத்துவதற்கு இடம் உள்ளது. மீன் குளம் உள்ளது’ என்று வீட்டைப் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், ‘சிறப்பு சலுகையாக வீட்டை விலைக்கு வாங்குபவர், வீட்டின் உரிமையாளர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கேட்கலாம். உண்மை யாக விலைக்கு வாங்குபவர்கள் தொடர்பு கொள்ளலாம். பேரம் கிடையாது. நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. அத்துடன் வீட்டுக்கு முன்பு வினா லியா போஸ் கொடுத்த புகைப்படமும் வெளியிடப் பட்டது. வீட்டின் விலை 75 ஆயிரம் டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 45 லட்சம்). இந்த விளம்பரத்தை இணையதளத்தில் ஏராளமானோர் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
விளம்பரத்தை இணையதளத் தில் பார்த்த ஒருவர், ‘‘வினா லியா புத்திசாலி. வீட்டை விலைக்கு விற்ற பிறகும், அந்த வீட்டின் உரிமையாளராகவே இருப்பார்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லியா கூறியதாவது:
விளம்பரத்தைப் பார்த்து என்னிடம் பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் வந்தனர். போலீஸாரும் விசாரிக்க வந்த போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். உண்மையில் இது என்னுடைய யோசனையே இல்லை. என் நண்பர் ஒருவர் வீடுகளை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். அவரிடம் வீட்டை விற்க ஏற்பாடு செய்யுமாறு கூறினேன். அத்துடன், எனக்கு திருமணத்துக்கு ஆள் பார்க்குமாறும் கூறியிருந்தேன்.
மனைவியை இழந்தவராக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறினேன். தனக்கு தெரிந்தவர்களிடம் இதுபற்றி பேசி ஏற்பாடு செய்வார் என்றுதான் நினைத்தேன். இப்படி இணையதளத்தில் விளம்பரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு வினா லியா கூறினார்.
விளம்பரத்தைப் பார்த்து வீட்டை விலைக்கு வாங்க ஒருவர் மட்டும் உண்மையாகவே வந்துள் ளார். அவரைப் பற்றிய விவரங் களை வெளியிட லியா மறுத்து விட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago