அமெரிக்காவில் விமான விபத்து: ‘இண்டியானா ஜோன்ஸ்’ நடிகர் படுகாயம்

By ஏஎஃப்பி

'இண்டியானா ஜோன்ஸ்' எனும் பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் ஹாரிசன் ஃபோர்டு அமெரிக்காவில் நேற்று ஏற்பட்ட விமான விபத்தில் படுகாயமடைந்தார்.

72 வயதான ஃபோர்டு, சிறிய விமானம் ஒன்றில் பறந்துகொண்டி ருந்தார். அந்த விமானம் லாஸ் ஏஞ்சலுக்குத் தெற்கே உள்ள‌ வெனிஸ் நகரில் அமைந்திருக்கும் பென்மார் கோல்ஃப் மைதானத்தின் மேலே பறந்துகொண்டிருந்தது.

ஒற்றை இன்ஜின் கொண்ட அந்த விமானத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஃபோர்டு அந்த விமானத்தை உடனடியாகத் தரையிறக்க முயற்சித்தபோது, அந்த விமானம் விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தீயணைப்புப் படை யினர் கூறும்போது, "தகவலறிந்து நாங்கள் இங்கே வந்தபோது விமானத்தின் முன் பக்கம் பாதிப்படைந்திருந்தது. அதில் இருந்த ஃபோர்டு பாதுகாப்பாக வெளியேறிவிட்டார்.

எனினும் அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர் உடன டியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொள் ளும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்