ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்காக செசன்யாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைகளையே கடத்தி சிரியாவுக்கு சென்றுள்ளார்.
நெதர்லாந்தில் முதன்முறையாக ஐ.எஸ். அமைப்பில் சேர ஒருவர் சென்றிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செசன்யாவைச் சேர்ந்த இந்த 33 வயது பெண்மணியின் கணவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆனால் இருவருக்குமான திருமண உறவு முறிந்தது.
போலி பாஸ்போர்ட் உதவியுடன் இந்த 33 வயது பெண்மணி தனது 7 மற்றும் 8 வயது குழந்தைகளைக் கடத்திச் சென்று சிரியாவின் ஐ.எஸ். அமைப்பு வலுவாகத் திகழும் ரக்கா என்ற இடத்திற்குச் சென்றிருப்பதாக நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்மணி குழந்தைகளுடன் நெதர்லாந்து நாட்டில் மாஸ்ட்ரிக்ட் என்ற ஊரில் வசித்து வந்தார். ஆனால் கடந்த அக்டோபர் 29, 2014 முதல் இவர்களை அங்கு காணவில்லை.
குழந்தைகள் படிக்கும் இஸ்லாமிய பள்ளியின் தலைவர், தந்தைக்கு இந்தக் கடத்தல் பற்றி அறிவுறுத்தியுள்ளார். அதாவது விமான டிக்கெட்டுகளை தானாகவே அச்சிட்டு குழந்தைகளைக் கடத்தி சிரியாவுக்கு சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐ.எஸ். அமைப்பின் உதவியின்றி இத்தகைய துணிகரச் செயலைச் செய்ய வாய்ப்பில்லை என்று நெதர்லாந்து அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago