சேற்றில் சிக்கிய ராட்சத லாரியை மீட்ட குட்டி யானைகள்

By ஏபி

லூஸியானாவில் சேற்றில் சிக்கிய ராட்சத லாரியை யானை குட்டிகளே மீட்டது.

லூஸியானாவின் நியூ ஆர்லியன்ஸிலிருந்து டலாஸுக்கு யானைகளை ஏற்றி சென்ற 8 சக்கரம் கொண்ட லாரி சேற்றில் சிக்கியது. லாரியின் ஓட்டுநர் எவ்வளவு முயற்ச்சித்தும் லாரியை மீட்க முடியவில்லை.

உடனடியாக லாரியின் டிரைவர் 2 யானைகளை கீழே இறக்கி, லாரியின் பக்கவாட்டில் நிறுத்தி லாரியை மீட்க முயற்சித்தார். இதனை புரிந்து கொண்ட யானைகள் இரண்டும் சாதூரியமாக சேற்றிலிருந்து லாரியை முயற்சித்து தள்ளியது.

மீட்க நீண்ட நேரம் ஆன நிலையில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார். தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த போலீஸார் யானைகளுக்கு பாதுகாப்பு வழங்கினர். யானை மற்றும் உரிமையாளர்கள் குறித்த விவரம் தெரியாத நிலையில் அவர்களது விவரங்கள் விசாரிக்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் நியூ ஆர்லியன்ஸ் அருகே சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்ததால், யானைகள் அங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்