இராக்கில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க புராதன நிம்ரத் நகரை ஐ.எஸ். தீவிர வாதிகள் அழித்து வருகின்றனர்.
இராக்கின் மோசூல் நகரத்தில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் நிம்ரத் நகரம் அமைந்துள்ளது. அசிரியா மன்னர்கள் ஆட்சி நடத்தியபோது அவர்களின் தலைநகராக நிம்ரத் விளங்கியது.
இந்த நகரில் அசிரியா ஆட்சிக் காலத்தின் சிறப்பை விளக்கும் வகையில் பல்வேறு சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் கலைபொக்கிஷங்கள் உள்ளன. 2000 ஆண்டுகள் பழமையான இந்நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கூறியபோது, நிம்ரத் நகரில் விரும்பத்தகாத சிற்பங்கள் உள்ளன, அவற்றை அழித்து தரைமட்டமாக்கி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
கடந்த வாரம் மோசூல் நகரின் அருங்காட்சியகத்தில் உள்ள முக்கிய கலை பொக்கிஷங் களை ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை முதல் நிம்ரத் நகரும் அழிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இராக் அரசு வட்டாரங்கள் கூறியபோது, இராக் வரலாற்றின் மணிமகுடமாக நிம்ரத் விளங்கியது, அந்த நகரின் தொன்மையான சின்னங்கள் அழிக்கப்படுவது துரதிருஷ்டவச மானது என்று தெரிவித்தன.
2003-ம் ஆண்டில் இராக்கில் அமெரிக்க படைகள் நுழைந்தபோது நிம்ரத் நகரின் கலைபொக்கிஷங்கள் சூறையாடப்பட்டன. அதில் தப்பிய வற்றை தற்போது ஐ.எஸ். தீவிரவாதி கள் அழித்து வருகின்றனர் என்று யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இராக்கின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய அவசர ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
திக்ரித்தில் கடும் சண்டை
முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தை கைப்பற்ற கடந்த சில நாட்களாக இராக் அரசு படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருதரப்புக்கும் இடையே அங்கு கடும் சண்டை நடைபெற்று வருகிறது. எனவே அந்நகர மக்கள் அகதிகளாக முகாம்களில் தஞ்ச மடைந்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago